Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

மே 20, 2022 04:04

சென்னை நங்கநல்லூர் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் இன்று (20 ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பாலாலயம் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றது. திருக்குடமுழுக்கை முன்னிட்டு 16ம் தேதி யாக சாலை வளர்க்கப்பட்டு, லட்சுமி, நரசிம்ம சுதர்ஷன ஹோமங்கள், விசேஷ சந்தி, இரண்டாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 17 ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. 19 ம் தேதி புண்யாஹவாசனம், காலசந்தி திருவாராதனம், அதிவாசத்ரய ஹோமம், வேதவிண்ணப்பம், சாற்றுமறை நிகழ்வு நடந்தது. இன்று கோபுரங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆன்மிக முக்கிய பிரமுகர்கள் , பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்