Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்., இரட்டை வேடம்: ஜி.கே.வாசன் பாய்ச்சல்

மே 23, 2022 12:05

கோவை : கோவையில் நேற்று நடந்த கட்சி விழாவிற்கு பின் நிருபர்களிடம் வாசன் கூறியதாவது: தி.மு.க., ஓராண்டு கால ஆட்சியிலேயே மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால், அவற்றை நிறைவேற்ற தவறி விட்டது.சொத்துவரி என்ற பெயரில் சுமையை மக்கள் மேல் சுமத்தி இருப்பது ஏற்புடையது அல்ல.மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது போல, மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும்.ராஜிவ் கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலையில், காங்., இரட்டை வேடம் போடுகிறது. ராஜிவ் நினைவு நாளன்று, அவரது கொலையாளிகள் ஆறு பேரை விடுவிப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசித்து இருப்பது தேவையற்றது.
இது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.தமிழகத்தில் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் இதுபோன்ற ஆலோசனை நடத்தியிருப்பது தேவையற்றது. தமிழக மக்கள் வெறுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.இந்த விவகாரத்தில் காங்., கட்சியின் முக்கிய தலைவர்கள் ஏன் வாய்மூடி மவுனமாக உள்ளனர் என்று தெரியவில்லை. பதவி ஆசை தான் காரணம் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. காங்., தொண்டர்கள் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளனர் என்று அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்