Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரகாண்டில் 5760 மீ., சிகரத்தில் ஏறி சாதனை அர்ஜூன்பாண்டியன்

மே 25, 2022 05:24

மூணாறு : இடுக்கி மாவட்ட வளர்ச்சி ஆணையர் அர்ஜூன்பாண்டியன் உத்தரகாண்ட் மாநிலத்தில் 5760 மீட்டர் உயரம் கொண்ட திரெளபதி கா தண்டா 2 சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்.மலையேறுவதில் ஆர்வம் கொண்ட அர்ஜூன்பாண்டியன் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் சப்-- கலெக்டராக பணிபுரிந்த போது பல்வேறு மலைகளில் சாகச மலையேறுதலை வழக்கமாக கொண்டார்.
மலையேறுவது குறித்து பயிற்சி பெற விரும்பியவர் சொந்த செலவில் தலா 28 நாட்கள் வீதம் இரண்டு கட்டங்களாக பயிற்சி பெற்றார். முதற்கட்டமாக கடந்தாண்டு டார்ஜிலிங் ஹிமாலயன் மவுண்ட்டேனிரிங் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி முடித்தார். பிறகு உத்தரகாசியில் நேரு இன்ஸ்ட்டியூட் ஆப் மவுண்ட்டேனிரிங் மையத்தில் பயிற்சி பெற்றார். ராக்கிராப்ட் பனிப்பாறையில் ஏறுதலில் அவருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இரு கட்ட பயிற்சியை முடித்தவர் உத்தரகாண்ட்டில் உள்ள 5760 மீட்டர் உயரம் கொண்ட திரௌபதி கா தண்டா 2 சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்."எவரெஸ்ட் உள்பட பல்வேறு சிகரங்களில் ஏறி தேசிய கொடியை நட வேண்டும் என்பது லட்சியம்" என அர்ஜூன் பாண்டியன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்