Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துணை நிலை கவர்னராக வினய்குமார் சக்சேனா பதவியேற்பு

மே 26, 2022 12:09

புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னராக வினய்குமார் சக்சேனா இன்று பதவியேற்கிறார் . டில்லி துணை நிலை கவர்னராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் பைஜால், 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பதவி காலத்தில் அவருக்கும், டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே, பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அனில் பைஜால், கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக, தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வினய்குமார் சக்சேனாவை டில்லியின் புதிய துணை நிலை கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வினய்குமார் சக்சேனா இன்று பதவியேற்க உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்