Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

13 ஆம்புலன்ஸ்கள் சுகாதாரத்துறைக்கு ரங்கசாமி வழங்கினார்

மே 26, 2022 06:09

புதுச்சேரி: புதுவை சுகாதாரத்துறைக்கு ரூ. 1 கோடியே 75 லட்சம் செலவில் 4 பெரிய ஆம்புலன்ஸ், 9 சிறிய ஆம்புலன்ஸ்களும் வாங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உள்பட ரூ.8 லட்சம் செலவில் நவீன மருத்துவ முதல் உதவி கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆம்புலன்களை சுகாதாரத்துறையிடம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் நடந்தது.  முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆம்புலன்ஸ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சபநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  புதுவை அரசு மருத்துவ மனைக்கு 2, காரைக்காலுக்கு 1, ஏனாமுக்கு 1 என 4 பெரிய ஆம்புலன்ஸ்களும், அரசு மருத்துவமனைக்கு 6, காரைக்காலுக்கு 2, ஏனாமுக்கு 1 என 9 சிறிய ஆம்புலன்சுகளும் வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆம்புலன்ஸ்கள் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்