Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விரைவில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் அமல்

மே 27, 2022 02:17

பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை முழு வீச்சில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. எந்தந்தத் துறைகளில் முதற்கட்டமாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றம் அச்சுறுத்த லாக உருவெடுத்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதை படிம எரிபொருளுக்கு மாற்றாக புதுப் பிக்கத்தக்க எரி ஆற்றலுக்கான கட்டமைப்பை விரிவாக்க உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

இந்தியா பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பசுமை ஹைட்ரஜன் கொள்கையை அறிவித்து, உற்பத்தியை ஊக்குவிக்க பல சலுகைகளை அறிவித்தது. 2030-ம்ஆண்டுக்குள் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

சுவிட்சர்லாந்து தாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு தொடங்கியது. அதில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏனைய நாடுகளை விடவும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்