Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏற்காடு கோடைவிழாவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மே 27, 2022 04:20

ஏற்காடு: ஏற்காட்டில் 45-வது  கோடை விழா நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கோடை விழாவை காண வருகை தந்தனர். அண்ணா பூங்காவில் அமைந்துள்ள சுமார் 5 லட்சம் மலர்களை கண்டுகளித்தனர். மலர்களால் வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி, சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், பேருந்து போன்றவைகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பாக அமைக்கப்பட்ட துறை சார்ந்த விளக்க கூடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஊராட்சிகள் சார்பாக அமைக்கபட்டுள்ள காட்சி கூடத்தில் கிராம சபா எவ்வாறு மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை விளக்கும் விதமாக காட்சி அமைக்கபப்ட்டு உள்ளது. 

மேலும் இந்திய அஞ்சல் துறை சார்பாக அமைக்கப்பட்ட விளக்க கூடத்தில் சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, புதிய வகை ஸ்டாம்ப் அஞ்சல் துறையில் மக்கள் எவ்வாறு சேமிப்பது குறித்து விளக்கம் உள்ளது. இதே போல் சுகாதார துறை, ஆவின், காதி, பொன்னி, சத்துணவு போன்ற விளக்க கூட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.  இன்று காலை சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான விளையாட்டு போட்டியும்,  இளஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பாக இளைஞர்களுககான விளையாட்டு போட்டிகள்  மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 

தலைப்புச்செய்திகள்