Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்விக் கொள்கை முக்கியத்துவத்தை உணர வேண்டும்: கவர்னர்

மே 27, 2022 05:02

திருவாரூர்: அதிகாரிகள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து, அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். பிரதமரின் பார்வையில் இந்தியா ஒரு பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி உள்ளது.
அதிகாரிகள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து, அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். விரைவாகவும், சுமூகமாகவும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்