Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்

மே 27, 2022 06:18

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்; வரும் 30ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. புதுவை மின்துறையை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். தனியார்மயம் குறித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் உணவகத்தில் நடந்தது.

கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சேதுசெல்வம், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் முருகன், பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், மதிமுக மாநில தலைவர் கபிரியேல் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதுவை மின்துறை லாபத்தில் இயங்கும் நிலையில், தனியார்மயமாக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின்துறை தனியார்மயத்தைக் கண்டித்து வரும் 30ந் தேதி முதல் மனிதசங்கிலி, தெருமுனை பிரசாரம், பேரணி நடத்துவது என்றும், தமிழகம், புதுவை எம்பி, எம்எல்ஏக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்