Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி கோவிலில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஏலம்

மே 28, 2022 11:51

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16 , 17-ந் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலும், gmauctionsttdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்