Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழக்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த வடிவமைப்புகள்

மே 28, 2022 11:53

குன்னூர்: குன்னூரில் 62-வது பழக்காட்சி இன்று (மே 28) தொடங்கியது. ஓரு மெட்ரிக் டன் கருப்பு மற்றும் பச்சை திராட்சை பழங்களால் வடிவமைக்கப்பட்ட கழுகு மற்றும் கரடி வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்காட்சி இன்று தொடங்கியது. இதில் ஒரு மெட்ரிக் டன் எடையிலான பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்களைக் கொண்டு 9 அடி உயரம் மற்றும் 12 அடி நீளத்தில் கழுகு மற்றும் 9 அடி உயரத்தில் கரடி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த வடிவமைப்பு கண்காட்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. மேலும், ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, சாத்துக்குடி, ஸ்டிராபெரி, கொய்யா பழங்களை கொண்டு பல வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பழங்கள் கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆரஞ்சு, ஸ்டிராபெரி, செர்ரி, முலாம் பழங்களால் ரதம், தாஜ்மஹால், மீன் உருவ அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, பழங்கள் கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் சூழ்நிலையை வெகுவாக அனுபவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்