Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை - தேனி சிறப்பு ரயிலில் முதல் பயணம்

மே 28, 2022 11:59

மதுரை : மதுரை - தேனி விரைவு சிறப்பு ரயிலில், முதல் நாளான நேற்று, 574 பயணியர் பயணித்துள்ளனர்.மதுரை - தேனி வழித்தடத்தில் அகல ரயில் பாதை பணிகளால், 11 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்தை, பிரதமர் மோடி நேற்று முன்தினம், சென்னையில் காணொலிக் காட்சியில் துவக்கினார். இந்த ரயிலுக்கு, பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.முதல் நாளான நேற்று, தேனி சென்ற ரயிலில், லோகோ பைலட் வெங்கடேஸ்வரன், உதவி பைலட் அருண்குமார், ரயில் மேலாளர் அழகர்ராஜன் பணிபுரிந்தனர்.மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி நிலையங்களுக்கு முறையே 19, 31, 33, 273 பேர் பயணித்தனர். வடபழஞ்சியில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 7, 10, 27 பயணியர், உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109, ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணியர் பயணித்தனர்.

++++++++++

தலைப்புச்செய்திகள்