Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

31, 1-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து 

மே 30, 2022 11:30

சென்னை: பயணிகள் பாதுகாப்பு கருதி அரக்கோணம் யார்டில் வருகிற 31 மற்றும் 1-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 5 ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரெயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு அரக்கோணம் புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே ரத்து. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணி புறப்பட்டு செல்லும் ரெயில் திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து. காலை 11 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் புறப்படும் ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

31, 1-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்கு புறப்படும் திருத்தணி-மூர்மார்க்கெட் முழுவதும் ரத்து. காலை 11.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-திருத்தணி முழுவதும் ரத்து.

பகல் 12 மணிக்கு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 12.35 மணிக்கு திருத்தணி-மூர்மார்க்கெட் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 1.30 மணிகு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கடம்பத்தூர்- மூர்மார்க்கெட், திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம் இடையே இயக்கப்படுகின்றன.
 

தலைப்புச்செய்திகள்