Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை : அரசு செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

ஜுன் 01, 2022 11:50

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு செயலாளர்கள் ஆய்வு கூட்டம் தொடங்கியது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் 2 நாட்கள் ஆய்வு கொட்டம் நடத்தப்படுகிறது. சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டத்தில் இன்று மற்றும் நாளை 2 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்கள், கிளை செயலாளர்கள், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும், ஏற்கனவே சட்டப்பேரவையில் அரவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் நிலை என்ன என்பது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நகராட்சி, நீர்வளம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை,மின் துறை, தொழில் துறை உள்ளிட்ட 19 துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து அறிவிப்புகளும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் இந்த ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்