Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜிஎஸ்டி: ரூ.1.40 லட்சம் கோடி வசூல்

ஜுன் 01, 2022 05:56

புதுடில்லி: கடந்த மே மாதம் ஜி.எஸ்.டி ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்த தொடர்ந்து 3வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டி வசூலாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மே மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,40,885 கோடியில்
சிஜிஎஸ்டி - ரூ.25,036 கோடி
எஸ்ஜிஎஸ்டி- ரூ.32,001 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.73,345 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.37,469 கோடி உட்பட)
செஸ்-ரூ.10,502 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.931 கோடி உட்பட) அடங்கும்.
இந்த வசூலானது, கடந்த ஆண்டு(2021) மே மாதம் வசூலான ரூ.97,821 கோடியை காட்டிலும் 44 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்