Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1 லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்படும்: அமைச்சர் பேச்சு

ஜுன் 02, 2022 11:19

உத்திரமேரூர் : கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கான இரண்டாம்கட்ட பணி, உத்திரமேரூர் அருகே நேற்று துவக்கப்பட்டது. ''1 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஹிந்து சமய அறநிலைத் துறை சார்பில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி, கடந்தாண்டு அக்டோபரில் துவக்கப்பட்டது.முதற்கட்டமாக தமிழகம் முழுதும் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அதற்கான கற்கள் நடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட பணிகளுக்கான துவக்க விழா, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில், வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. இக்கோவிலுக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் அளவிடப்பட்டு, கல் நடப்பட்டது.அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன் ஆகியோர், இப்பணிகளை துவக்கி வைத்தனர்.
அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கோவில் நிலங்களை மீட்கும் முதற்கட்ட பணிக்கு, உரிமம் பெற்ற 150 நில அளவையர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.மாநிலத்தின் 20 மண்டலங்களிலும், இணை ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில், 50 குழுக்கள் அமைக்கப்பட்டு, 'ரேவர்' கருவி மூலம், தற்போது வரை 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் இரண்டாம் கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.நிலம் அளவீடு செய்ய, தற்போதுள்ள குழுக்களுடன் மேலும் கூடுதலாக 50 குழுக்கள் இணைக்கப்பட்டு, மொத்த 100 குழுக்கள், நிலம் அளவீட்டு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடுகள் செய்யப்பட்டு, அதற்கான எல்லை கற்கள் நடப்படும்  என்று அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்