Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு

ஜுன் 02, 2022 11:43

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் 13-ந் தேதி முடிந்தன.

இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மாணவ- மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்