Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஐ.டி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி

ஜுன் 02, 2022 07:24

புதுச்சேரி: மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் சி.ஐ.ஐ, ஒய்.ஐ-யுவா புதுவை வாழும் கலை ஆகியவை இணைந்து நடத்திய ‘உலக புகையிலை ஒழிப்பு தின விழா’ எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி  முதல்வர் டாக்டர். மலர்க்கண் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி விஜயபிரசாத் வரவேற்புரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினர் களாக தேசிய வாய்வழி சுகாதாரத் திட்டத்தின் மாநில திட்ட அலுவலர்  டாக்டர்.கவிப்பிரியா உத்தமன், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட மாநில ஆலோசகர் டாக்டர் சூரியகுமார்,  ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புகையிலையினால் ஏற்படும் நோய்கள், அதனால் உருவாகும் பாதிப்புகள் குறித்து பேசினர்.

கிராமப்புற மாணவர் களுக்கும், மக்களுக்கும் புகயைிலை பழக்கத்தை விடுவிக்கும் விழிப்புணர்வு முறைகளையும், பொது இடங்களில் பயன் படுத்தும்போது அதை சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அலைபேசி எண்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.

பிற்பகல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பல் மருத்துவர் மற்றும் வாழும் கலை பயிற்சியாளர் செல்வநாதன் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பழக்கம், பிணைப்பு, வாழ்க்கை ஆகியவற்ைற  தியானத்தின் மூலம் ஒன்றிணைக்கும் முறைகளையும், மன கட்டுப்பாட்டையும், வளர்க்கும் செய்முறை பயிற்சி முறைகளை அளித்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவ செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்