Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு: சுப்ரமணியசாமி சந்தேகம்

ஜுன் 02, 2022 08:56

புதுடில்லி: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த 15வது ஐ.பி.எல்., தொடரின் பைனல், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. ராஜஸ்தானை வீழ்த்தி, ஐ.பி.எல்.,லில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணி, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது.

இது தொடர்பாக சுப்ரமணியசாமி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளது. அமித்ஷாவின் மகன் பிசிசிஐ.,- யை ஆட்டுவிக்கும் சர்வாதிகாரியாக உள்ளதால், மத்திய அரசு விசாரணை செய்யாது. இவ்விவகாரத்தை தெளிவுபடுத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்