Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூன்றாம் இடத்தில் தமிழகம்: 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி

ஜுன் 03, 2022 12:52

சென்னை: கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமத்தியில் தமிழகத்தின் பங்கு 8.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021 - 22ம் நிதியாண்டில் 31.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியானவை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 8.34 சதவீதமாக உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது 2020 - 21ம் நிதியாண்டில் 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2019 - 20ம் நிதியாண்டில் தமிழக ஏற்றுமதியின் மதிப்பு 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2021 - 22ம் நிதியாண்டில் 9.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும் 5.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மகராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

தலைப்புச்செய்திகள்