Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம்: பிரதமர்

ஜுன் 03, 2022 04:05

லக்னோ: இந்தியாவில் உ.பி., மாநிலம் அபார வளர்ச்சி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். உத்தர பிரதேசத்தில், 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான 805 திட்டங்களுக்கு, பிரதமர் மோடி இன்று (ஜூன் 03) அடிக்கல் நாட்டினார். மாநாட்டில் அதானி, அம்பானி தொழிலதிபர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு டிஜிட்டல் துறையில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் 100 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் 100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் டிஜிட்டல் துறை வளர்ச்சியை உருவாக்கி உள்ளோம். நாட்டில் 40 சதவீதத்தினர் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்கின்றனர் . டிஜிட்டல் கட்டமைப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரேநாடு, ஒரே ரேசன் , ஒரே வரி எங்களின் நோக்கம். நாட்டின் முன்னேற்றமே எங்கள் இலக்கு. உ.பி.,யில் இன்று துவங்கப்படும் திட்டங்கள் மூலம் 5 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவர். இந்தியாவில் உ.பி., மாநிலம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. இன்னும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு மோடி பேசினார். விழாவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவில் புதிய பரிமாணங்கள் நிறுவப்பட்டுள்ளன. உபி.,யி,ல் விரைவுச் சாலை, விமான நிலையம் மற்றும் ரயில் வசதிகள் போன்றவற்றில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொழில்துறை முதலீட்டுக்கு பெரிதும் உதவுகிறது என்றார்.

தலைப்புச்செய்திகள்