Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கைக்கு உரம் சப்ளைசெய்ய பிரதமர் மோடி உறுதி

ஜுன் 03, 2022 06:41

கொழும்பு: இலங்கையின் வேளாண் பாதிப்பை தடுக்க, பிரதமர் மோடி உரம் சப்ளை செய்ய உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான இலங்கை, உர இறக்குமதிக்கு தடை விதித்ததால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நெல் சாகுபடி குறைந்து உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இலங்கை அரசு இந்தியாவிடம் உரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தது

இதை ஏற்று பிரதமர் மோடி, இலங்கைக்கு உரம் வழங்க உறுதி அளித்துள்ளதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கைக்கு, 65 கோடி கிலோ உரம் வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி விரைவில் இலங்கைக்கு உரம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்