Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரிக்காகரா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

ஜுன் 03, 2022 08:22

கொச்சி: கேரளாவில், திரிக்காகரா சட்டசபை இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர், உமா தாமஸ் வெற்றி பெற்றது ஆளும் இடது ஜனநாயக முன்னணி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், , திரிக்காகரா தொகுதி காங்., - எம்.எல்.ஏ., தாமஸ் இறந்ததை அடுத்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் தாமஸ் மனைவி உமாவை வேட்பாளராக காங்., நிறுத்தியது, இடது ஜனநாயக முன்னணி சார்பில் டாக்டர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டார்.
இந்த இடைத்தேர்தலில் காங். எதிர்ப்பை மீறி அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தாமஸ் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜோ ஜோசப்பை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரம் வீணானது.

தேர்தல் முடிவுகள் இன்று வெளியாயின. இதில் காங். வேட்பாளர் உமா தாமஸ், 72,770 ஓட்டுக்களும், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜோ ஜோசப் 47,752 ஒட்டுகளும் பெற்றனர். இதையடுத்து உமா தாமஸ் 25,515 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி வேட்பாளர் ஜோ ஜோசப்பை தோற்கடித்தார்.
இடைத்தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்த முதல்வர் பினராயி விஜயனுக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில காங்., தலைவர் சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்