Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவகங்களில் சேவை கட்டணம் தடுக்க சட்டம்: உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர்

ஜுன் 03, 2022 10:36

புதுடில்லி-உணவகங்கள் தங்களுடைய 'பில்'லில், சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது என, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, பலதரப்புகளிலிருந்தும் புகார்கள் வருகின்றன.இதையடுத்து, அமைச்சகம், உணவக பிரதிநிதிகளுடன் கடந்த வியாழன் அன்று பேச்சு நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பியுஷ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க விரும்புகின்றனர் எனில், உணவு விலையை ஏற்றிக் கொள்ளட்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. உணவுக்கான விலையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இதற்கு நாட்டில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.ஆனால், அதற்கு பதிலாக, சேவை கட்டணம் எனும் பெயரில், அதை நுகர்வோரிடம் திணிப்பது சரியாகாது. உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உணவுக்கான விலையை அதிகரித்துக் கொள்ளவோ தடை எதுவும் இல்லை. ஆனால், மறைமுக விலை இருந்தால், உண்மையான விலையை எப்படி அறிய முடியும்?

சேவையில் திருப்தி ஏற்பட்டால், நுகர்வோர் 'டிப்ஸ்' தருகின்றனர். அதை தொடர்வதில் ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, அமைச்சகம் தரப்பில், நியாயமற்ற இந்த கட்டண வசூலிப்பை தடுக்க, உரிய சட்டம் வெளியாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்