Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் நிட்டெக் கண்காட்சி

ஜுன் 04, 2022 02:29

திருப்பூர்:பின்னலாடை உற்பத்திக்கான அதிநவீன தொழில்நுட்பங்களுடன், 'நிட்டெக்' கண்காட்சி திருப்பூரில் துவங்கியது.
நாட்டின் மிகப்பெரிய பின்னலாடை இயந்திர கண்காட்சியான 'நிட்டெக்' திருப்பூர் - திருமுருகன்பூண்டி, 'ஹைடெக் இன்டர்நேஷனல்' வளாகத்தில் துவங்கியது. இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், கண்காட்சி அரங்கை திறந்துவைத்தார்.
மொத்தம், 275 ஸ்டால்களில், திருப்பூர், கோவை, லுாதியானா போன்ற உள்நாட்டு மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, கொரியா, தைவான் என பல நாடுகளை சேர்ந்த 165 நிறுவனங்கள், பின்னலாடை உற்பத்தி சார்ந்த அதிநவீன இயந்திரங்களை இடம்பெறச் செய்துள்ளன.நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தையல் என ஆடை உற்பத்தியின் அனைத்து பிரிவுகளுக்கான புதுமையான தொழில்நுட்பங்களும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன.

கண்காட்சி, வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. நாடு முழுதும் உள்ள பின்னலாடை தொழில் துறையினர், கண்காட்சியை பார்வையிட்டு, மெஷின் கொள்முதலுக்கான வர்த்தக விசாரணைகளை நடத்துகின்றனர். தென்னிந்திய பனியன்உற்பத்தியாளர் சங்க தலைவர் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி, ஹைடெக் இன்டர்நேஷனல் நிறுவன இயக்குனர் ராயப்பன் உட்பட தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்