Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில்திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பிப்ரவரி 07, 2019 08:27

சென்னை: திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2019-20ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.  

இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. பட்ஜெட்டில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.  

மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்த மாதிரியான வாதங்களை முன்வைப்பது என திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்