Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடபழனி முருகன் கோவிலில் பெருவிழா

ஜுன் 04, 2022 02:42

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் வரசித்தி விநாயகர் திருவீதி உலா நடந்தது. நேற்று காலையில் 5.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து உற்சவர் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பின்னர் விநாயகர் மாடவீதிகளை வலம் வந்தார். நேற்று இரவு மங்களகிரி விமான புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இன்று காலை சூரிய பிரமை பிறப்பாடு நிகழ்ச்சி நடந்தது மாலையில் சந்திரபிரமை புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் தினமும் மங்கள கிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம், குதிரை வாகனம், மயில்வாகனம் ஆகியவற்றில் வீதி உலா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந்தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அன்று இரவு 7 மணிக்கு ஒய்யாரி உற்சவம் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. 12-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகர் வீதி உலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அதன்பிறகு 14-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தலைப்புச்செய்திகள்