Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்: பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஜுன் 04, 2022 03:22

கொழும்பு : இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனிடையே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வரிகள் மற்றும் ஆடம்பர பொருட்களின் விலையை 2 மடங்கு உயர்த்தி பிரதமர் ரணில் உத்தரவிட்டார். இந்த நிலையில் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் ரணில், வரும் செப்டம்பர் மாதம் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் மக்களை பசி, பட்டினியில் இருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பலருக்கு ஒரு வேளை உணவுக் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். இதனிடையே வரும் காலங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டதால் உணவுப் பொருட்கள் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.எரிபொருள், உணவு பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்