Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, நடப்பாண்டில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்

ஜுன் 06, 2022 12:47

சென்னை : சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, நடப்பாண்டில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகள்; பசுமை உற்பத்தி பொருட்கள் ஊக்குவிப்பு மானியம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:
உலகளவில், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு ஆகிய இரண்டு காரணிகளும் பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. காலநிலை மாற்றத்தால், பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். மரங்கள் நடுவதன் வாயிலாக, சுற்றுச்சூழல் மாசு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.எனவே, இந்தாண்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். உழவர் உற்பத்தியாளர்களின் பசுமை உற்பத்தி பொருட்கள், எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக விளங்கும்.
இவ்வாறு அவர் பேசினார். சுற்றுச்சூழல் துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ பேசுகையில், ''சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, 'மஞ்சப்பை' திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. சென்னையில், மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்,'' என்றார்.
 

தலைப்புச்செய்திகள்