Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2-வது முறையாக அணுமின் நிலையத்திற்கு வந்த யுரேனியம் எரிகோல்கள்

ஜுன் 06, 2022 01:53

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகள் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை ரஷ்யா அரசுத்துறை நிறுவனமான ரோஸாட்டம் மூலம் 60 ஆண்டுகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலில் எரிகோல்கள் வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் கடந்த மே மாதம் 27-ந் தேதி கூடங்குளத்திற்கு வந்தடைந்தது. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து 2-வது முறையாக நேற்று அவை மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் சாலை மார்க்கமாக 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினரின் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. அணு உலையில் 163 எரிகோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்