Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க., எம்.பி., கனிமொழியை மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு

ஜுன் 06, 2022 01:56

சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழியை இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து பேசினார். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் உலகிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும் என கனிமொழியிடம் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். மேலும், ஹெலன் மாஸ்க் 42,000செயற்கை கோள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதை விட அதிகமாகவும் விரைவாகவும் குலசேகரப்பட்டினத்தில் செயற்கை கோள்களை உருவாக்க முடியும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குலசேகரப்பட்டனத்தில் உள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் சுற்றியுள்ள பகுதிகளில் என்னென்ன தொழில் நிறுவனங்களை கொண்டு வரமுடியும் என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், ஏவுதள உதிரி பாகங்கள் தயாரிக்க உள்ளூர் தொழில் நிறுவனங்களை பயிற்றுவிக்க உள்ள வாய்ப்புக்கள் குறித்தும், பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மற்றும் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிகள் குறித்தும் பேசினர்.மயில்சாமி அண்ணாதுரை வழங்கிய ஆலோசனையை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து, ராக்கெட் ஏவுதளம் மற்றும் உதிரி பாகங்கள் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வலியுறுத்துகிறேன் என கனிமொழி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்