Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இதுவரையிலான செலவு ரூ.3.63 கோடி

ஜுன் 07, 2022 10:32

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இது வரையில் ரூ.3.63 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வம் பழனிசாமி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் என 154க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் விசாரணை கமிஷனின் பதிவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் விசாரணை கமிஷனின் அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனிடையேசென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பல்வேறு வசதிகள் கொண்ட விசாலமான அறை ஒதுக்கப்பட்டது.தற்போதைய நிலையில் ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷனின் பதவிக்காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலைியில் விசாரணை அறிக்கையை முழுமையாக தொகுக்கப்பட உள்ளதால் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கமிஷனின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுநாள் வரையிலான செலவு ரூ.3.63 கோடி செலவு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்