Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10.80 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை

ஜுன் 10, 2022 05:39

கோவை: தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  மருதமலை சேனாதிபதி ஆலோசனைப்படியும் மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் MRR.பிரகாஷ் நிதியில் இருந்து மலுமிச்சம்பட்டி ஊராட்சி 6வது வார்டு சக்தி ஸ்கூல் அருகில் சுமார் 10.80 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடையை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி முன்னிலையில்  சிறப்பாக நடைபெற்றது. 

தொடர்ந்து மதுக்கரை யூனியன் கவுன்சிலர் மாசிலாமணி  நிதியில் இருந்து மலுமிச்சம்பட்டி 1வது வார்டு ஜே.ஜே.நகர் பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட்ட பூமி பூஜை மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி முன்னிலையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்  ராஜன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமதுயாசின்,  ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி,பேரூராட்சி தலைவர்கள் பிரியதர்ஷினி, ராஜசேகர்,கீதா ஆனந்தகுமார் உட்பட கழக முன்னோடிகள்,மகளிர் அணியினர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்