Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நோணாங்குப்பம் படகு குழாமில் கர்ப்பிணிகள்-ஊனமுற்றோருக்கு நுழைவு கட்டணம் இல்லை

ஜுன் 11, 2022 03:29

புதுச்சேரி: புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ஜார்ஜ் கே மாரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை கடற்கரை சாலை லேகபே உணவகம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் உணவகத்தின் சேவைகள், செயல்பாடுகள் பொது மக்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லே கபே மீண்டும் திறக்கப்படும் வரை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மற்ற இடங்களில் செயல்படும் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். வரும் காலங்களில், கடற்கரையில் உள்ள சீகல்ஸ், நோணாங்குப்பம் படகு இல்ல வளாக உணவகம் ஆகியவை பொதுமக்களின் வசதிக்காக நாள் முழுவதும் செயல்படும். அரசின் வழிகாட்டுதலின்படி மதுபானங்களும் விற்பனை செய்யப்படும். நோணாங்குப்பம் படகு குழாமில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி 6 மணி முதல் தொடங்கப்படும். 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அனுமதிக்கப்படுவர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் சுண்ணாம்பார் படகு இல்லத்தில் நுழைவு கட்டணம் இல்லை. மேற்கண்ட நடவடிக்கைகள் சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, பார்வை யாளர்களுக்கு கூடுதல் வசதியும் கொடுக்கும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்