Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.டி.ரெய்டு: 4 நிறுவனங்கள் 433 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

பிப்ரவரி 07, 2019 08:35

சென்னை: சென்னையில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  

கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் அந்நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எவ்வளவு வரிஏய்ப்பு நடந்தது என்பது குறித்த தகவலை வருமானவரித்துறையினர் அப்போது வெளியிடவில்லை. 

இந்நிலையில் இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சென்னையில் ஜனவரி 29 ம் தேதி முதல் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்