Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை, பிற ஊர்களிலிருந்து கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கம்

ஜுன் 12, 2022 12:54

சென்னை: நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று (ஜூன் 12)கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ். எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 400 பேருந்துகள் கடந்த வாரம் இயக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நாளைய தினம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்க உள்ளதால், இன்றைய தினம் (12.06.2022) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்