Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்மீக அடித்தளம் தான் ஆம்புலன்சுக்கு 108 பெயர்: தமிழிசை விளக்கம்

ஜுன் 12, 2022 08:43

சென்னை: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பில் நடைபெற்ற 'ஹரிவராசனம்' நூற்றாண்டு விழாக் குழு தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சமாஜத்தின் தேசிய பொதுச் செயலர் சேகர், மூத்த தந்திரி பிரம்மஸ்ரீ முல்லப்பள்ளி கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். ஹரிவராசனம் நூற்றாண்டு விழாவை கவர்னர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததார். பின்னர் பேசிய கவர்னர் டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளதால் தினமும் ஓர் எழுத்து நம்மை காக்கிறது. அதேபோல் ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகளும் உள்ளன. 

இந்த 108 என்ற எண் இந்து மதம், புத்த மதம், யோகக்கலை ஆகியவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது 108 எண்ணாகும். அதனால் தான் உயிரை காக்கும் ஆம்புலன்சுக்கு கூட 108 என்று பெயர் வந்தது. சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலின் 18 படிகளை தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும்.    

இதில் முதல் 5 படிகள் நம் ஐம்புலன்களையும் அடக்குவது பற்றியும், அடுத்த 8 படிகள் (கோபம்,இச்சை, பேராசை, மோகம், பொறாமை, தற்பெருமை, போட்டி, கர்வம்) ஆகிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதையும், அடுத்த 3 படிகள் (நற்குணம்,வேட்கை, செயலற்ற தன்மை) போன்ற மனிதர்களின் மாறுபட்ட தன்மை பற்றியும், மேலே இருக்கும் மற்ற 2 படிகள் ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் நமக்கு சொல்லி கொடுக்கிறது. 18 படிகளையும் தாண்டிவிட்டால் வாழ்க்கையில் படிப்படியாக எதையும் தாண்டி விடலாம் என்ற வாழ்வியலை ஐயப்ப சுவாமி வழிபாடு நமக்கு சொல்லி கொடுக்கிறது. ஆக ஆன்மிகம் என்பது விஞ்ஞானம்தான் உடல் நலம்தான் மனநலம். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்