Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்தால் பறிமுதல்

ஜுன் 14, 2022 04:26

திருச்சி: பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படுவதோடு, திருப்பி தரப்பட மாட்டாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தது போல், மாணவர்கள், பள்ளிக்குள் மொபைல் போன் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் மீறி, யாரேனும், மொபைல் போன் பள்ளிக்கு கொண்டு வந்தால், அந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதோடு, திருப்பித் தரப்படமாட்டாது. கொரனோ காலகட்டத்தில், ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பயின்றனர் .

நேரடி வகுப்புக்கு வரும் பொழுது தடுமாற்றம் இருக்கும் என்பதால், முதல் 5 நாட்களுக்கு, தன்னார்வலர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு தான், பாடங்கள் நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், உடனடியாக இல்லடி கல்வித் திட்டம் நிறுத்தப்பட மாட்டாது. படிப்படியாகத்தான் நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்