Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு: தொடர்கிறது கோவிட் 19

ஜுன் 24, 2022 09:08

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன் 23) 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று, பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரமாக பதிவானது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,62,294 ஆனாது. கடந்த 24 மணி நேரத்தில், 13,029 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,49,056 ஆனது. தற்போது 88,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 13 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்தது. 

இந்தியாவில் இதுவரை 196.77 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,71,107 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்