Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

மே 09, 2019 08:59

திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வருண யாகம் போன்ற பூஜைகள் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும், இசை கலைஞர்களால் நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளால் மழை வேண்டி இசை ராகங்கள் இசைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து யாக கலசங்களை சிவாச்சாரியார்கள் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதியில் இருந்து சுமந்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் பூஜைகள் செய்து, கலசநீர் பிரம்ம தீர்த்தத்தில் தெளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்  செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்