Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பெறலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! 

ஜுலை 10, 2022 01:26

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை (11/07/2022) முதல் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

வரும் ஜூலை 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, அத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 18,72,339 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்தாண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழ் மொழியில் தேர்வு எழுத 31,803 பேர் விண்ணப்பத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்