Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆரணி புத்திரகாமேஸ்வரர் சிவன் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

மே 09, 2019 09:02

ஆரணி: புதுகாமூர் பகுதியில் உள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேஸ்வரர் சிவன் கோவிலில் வருண யாகம் நடைபெற்றது. கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் மோகன், ராஜாமணி, வைத்தியநாதன், அரிகரன், சத்தியமூர்த்தி உள்பட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க வருண யாக பூஜைகளை செய்தனர்.

பின்னர் பூஜிக்கப்பட்ட கலச நீரினை கோவில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள கமண்டல நாகநதி ஆற்றில் கொட்டி பூஜையினை நிறைவு செய்தனர். இதில் திரளாக பக்தர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்  செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்