Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சர்வதேச களத்தில் 18 மாதங்களுக்கு பிறகு சதம் பதிவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்

ஜுலை 10, 2022 04:40

கொழும்பு: சுமார் 18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் களத்தில் சதம் பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் FAB4 வீரர்களாக அறியப்படுகிறார்கள்.

இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட். இதில் கடந்த 2021 ஜனவரிக்கு பிறகு ஜோ ரூட் நீங்கலாக மற்ற மூவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை.

ஆனால் ரூட் மட்டும் இந்த 18 மாதங்களில் சுமார் 11 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ளார்.

ஸ்மித், கடைசியாக 2021 ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சதம் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டியின் முதல் நாளன்று 219 பந்துகளை எதிர்கொண்டு 109 ரன்களுடன் அவுட்டாகாமல் முதல் நாள் ஆட்டத்தை முடித்துள்ளார் அவர். இதனை இப்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் கோலி எப்போது மூன்று இலக்க எட்டுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதிவிரைவில் கோலி அதை செய்வார் என நம்புவோம்.

 

தலைப்புச்செய்திகள்