Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழடி: சுவற்றின் தொடர்ச்சி கண்டறிய கூடுதல் குழிகள்

ஜுலை 12, 2022 11:51

திருப்புவனம்: கீழடியில் ஜூலை 2ல் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சியை கண்டறிய கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக 15 குழிகள் தோண்டப்படுகின்றன. கீழடியில் ஏழு குழிகள் தோண்டப்பட்ட நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் ஜூலை 2ல் சேதமடையாத செங்கற்களால் கட்டப்பட்ட நேர்த்தியான சுவர் கண்டறியப்பட்டது. கிழக்கு நோக்கி இந்த சுவற்றின் தொடர்ச்சி இருக்க வாய்ப்புள்ளதால் கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொல்லியல் துறை இணை இயக்குனர் (கீழடி அகழாய்வு) ரமேஷ் தலைமையில் நேற்று தொடங்கியது.

கீழடி, சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் ஆங்காங்கே செங்கல் கட்டுமானங்கள் வெளிப்பட்டு வருவதால் கீழடி அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான செங்கல் கட்டுமானங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

கீழடியில் நீள் வடிவ தாயக்கட்டை, பாசி மணிகள், பானைகள், பானை ஓடுகள், உள்ளிட்ட 400க்கும் குறைவான பொருட்களே கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் வரைபடம் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த பின் மதுரை காமராஜர் பல்கலை மரபணு பிரிவுடன் இணைந்து முதுமக்கள் தாழிகள் திறக்கும் பணி நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்