Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

28 டிகிரி முடித்தாலும் தொடரும் ஆர்வம்- 68 வயது முதியவர் நீட் தேர்வு எழுத போகிறார்

ஜுலை 15, 2022 08:03

தஞ்சாவூர்: தமிழகத்தில் நாளை மறுநாள் (17-ந் தேதி) மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அனைவருக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். அந்த லட்சியத்தை நிறைவேற்ற நீட் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் செலவு இன்றி படிக்கலாம். 

இதற்காக தேர்வு எழுதும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து படிக்கின்றனர். இப்படி படிப்பவர்களில் பெரும்பாலானோர் தற்போது பிளஸ் -2 முடித்தவர்கள், இளம் வயது உடையவர்களே ஆவர். தேர்வு எழுத வயது வரம்பு கிடையாது என்றாலும் முதியவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதுவது என்பது மிகவும் அபூர்வமானது. அத்தி பூத்தாற்போல் ஆங்கொன்றுமாக நடக்கும் செயலாகும். 

கடந்த ஆண்டு சென்னையை 64 வயதான சுப்பிரமணியன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். இதேப்போல் தருமபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் என்பவரும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தார். இதையும் படியுங்கள்: மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அந்த வகையில் தற்போது தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். 

படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார். அதாவது 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவுக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுத்து வருகிறார். 

இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என். ராமமூர்த்தி (வயது 68). தஞ்சையில் பால் தணிக்கை துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இதனால் வேலை பார்க்கும் போதே குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்துவிட்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி. இவர்களுக்கு அகிலா, கோகிலா என்ற இரண்டு மகள்களும், முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர்.

 சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம்- வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம் சிறுவயதில் இருந்தே ராமமூர்த்திக்கு படிப்பின் மீது தீராத காதல் இருந்து வந்தது. விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இரு என்ற வாசகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். இவரது பெயருக்கு பின்னால் போடப்படும் படிப்புகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இதுவரை 28 டிகிரி முடித்து பெற்றுள்ளார் என்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது. அவ்வளவு டிகிரி முடித்தும் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் துளியும் குறையவில்லை. தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறார். 

வழக்கறிஞர் பணி, கல்வி போதனை, பள்ளி நிர்வாகம், ஆடிட்டிங், மனநல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து படித்து வருகிறார். அதன் விளைவாக தான் தற்போது 68 வயதிலும் நீட் தேர்வு எழுத உள்ளார். தேர்வு அறிவிக்கப்பட்ட உடனே விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஹால்டிக்கெட் வந்துவிட்டது. நாளை மறுதினம் நீட் தேர்வு எழுத தயாராகி வருகிறார். 

 மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்- மாதிரி வினாத்தாள்கள் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுக்கு எந்தவித நோயும் அண்ட கூடாது என்பதற்காக ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் இருந்தது. ஆனால் அது நிறைவேறாததால் டாக்டர் ஆகி அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 

அதற்குள் எனக்கு தஞ்சையில் பால் தணிக்கை துறையில் வேலை கிடைத்தது. மருத்துவக் கனவு ஒரு புறம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அது ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு டிகிரியாக முடித்து கொண்டே வந்தேன். தற்போது நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது தடை இல்லை என்பதால் எனது மருத்துவ கனவுக்கு மீண்டும் விதை தூவினேன். நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை நான் பெற்றிருந்ததால் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். அதன்படி எனக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது. 

நாளை மறுநாள் தேர்வு எழுத உற்சாகமாக உள்ளேன். கடந்த ஐந்து மாதங்களாகவே தொடர்ந்து இடைவிடாது படித்து வருகிறேன். கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது என்றார்.

தலைப்புச்செய்திகள்