Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா - பிரதமர் மோடி பங்கேற்பு

ஜுலை 23, 2022 06:47

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர். திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

தலைப்புச்செய்திகள்