Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவி ஸ்ரீமதி - சிசிடிவி காட்சி வெளியீடு

ஜுலை 25, 2022 02:03

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்தநிலையில், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவி பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி படிப்பு அறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி 13-ம் தேதி காலை பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. மாணவி இரவே உயிரிழந்தாரா? அல்லது காலையில் உயிரிழந்தாரா? என குழப்பம் நீடித்தது.

தலைப்புச்செய்திகள்