Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் வாழ்த்து

ஜுலை 25, 2022 08:21

பீஜிங்: இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான நாடுகள். இரு நாட்டின் மக்களைப் போலவே அரசுகளும் ஆரோக்கியமான, நிலையான உறவைக் கொண்டுள்ளன. 

அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை சரியாகக் கையாளவும், இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் முன்னோக்கி நகர்த்தவும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்