Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதயகுமார் பிள்ளைக்கு பிசினஸ் எக்ஸ்சலன்சி அவார்டு!

ஜுலை 30, 2022 05:47

எண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நமது மனதில் உண்டாகும் எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக் கின்றன என்பதை நம் முன்னோர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திச்  சென்றனர்.

நல்ல எண்ணங்கள் என்று கூறும்போது பெரும்பாலும் செயற்கையாக, நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணம் வேறு, சிந்தனை வேறு.

நாமாக ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பது சிந்தனையே ஒழிய, எண்ணம் அல்ல. எண்ணங் கள் என்பவை நம் மனதில் ஏற்கனவே பதிந்திருக் கும் பதிவுகளினால் சுயமாக உருவா குபவை. எண்ணங்களை யாராலும் உருவாக்க முடியாது. நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டுமென்றால் மனதினில் நல்ல பதிவுகளைப் பதிய வேண்டும்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்  எண்ணியர் 
திண்ணியர் ஆகப்பெரின்" - அதாவது ஒரு செயலைத் திட்டமிட்டு எண்ணியவர்,எண் ணியபடியே செயலாற்றுவதிலும் மன உறுதி யோடும்  இருந்தால், அவர் எண் ணியவற்றை  எண்ணியபடியே அடைவர். அந்த வகையில் திட்டமிட்டு மனதில் பதிந்த எண்ணங்களை செயலாற்றுப்பவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகதான் இருக்கும். அப்படிப் பட்டவர்கள்தான் வெற்றிப் பெறுபவர் களாக இருக்கிறார்கள். அந்த  வெற்றிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் உதயகுமார பிள்ளை.

தான் செய்யும் கட்டுமான தொழி லில், மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்க செய்கிறார். அதனாலேயே நாளுக்கு நாள் அவர் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது வெற்றி பாதையில் பிரகாசிக்கி றது. ஒரு தொழிலை தொடங்கினால் அதில் உள்ள சாதக, பாதகங்களை தெளிவாக உணர வேண்டும். அப்போதுதான் அதில் நீடித்திருக்க முடியும். 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து - அதாவது எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளி லும் உயர்வான எண்ணங்களை எண்ணு வதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. 

சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைக ளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான். 
அதே நிலைதான் உதயகுமார் பிள்ளைக்கும்...

நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியம் இருக்கும்; கனவு இருக்கும். நடுத்தர மக்கள் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரே கனவு, லட்சியம் எல்லாம் சொந்த வீடுதான். காலை நீட்டி ஆசுவாசும் கொள்ள நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.பாரதியின் ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ பாடலைச் சொந்த வீட்டுக்கும் ஒப்பிடலாம்.  

இந்தச் சொந்த வீடு கனவு நிறைவேற பணம் மட்டும் போதாது, அதை கனவை பிரதிபலிக்க சரியான நிறுவனமும், அந்த நிறுவனத்தின் ஊழி யர்களும் சரியானவர்களாக இருக்க வேண்டும்.  அந்த இடத்தை தனக்கானதாக நிரப்பிக் கொண்டு இன்று தன்னுடைய திருவாதிரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தை கோவை மக்களின் மனதில் நிலை நிறுத்தியுள்ளார் உதயகுமார பிள்ளை.

கோவையில் 1988ம் ஆண்டு முதல் எல்.ஜி டயர் & டிரட் லிமிடெட் கம்பெனியில் பணி புரிந்து கொண்டு 2002, 2003ம் ஆண்டுகளில் எல்.ஜி டயர் & டிரட் லிமிடெட் கம்பெனியின் வருமான சான்றிதழை வைத்து சிண்டிகேட் வங்கியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக் கடன் பெற்றார்.

அதை வைத்து கோவை வெள்ளலூரில் தன்னுடைய கனவான தனக்கென ஒரு சொந்த வீடு கட்டி 2 ஏக்கரில் RNK  நகர் என்கிற ஒரு புதிய நகரை உருவாக்கினார்.  அதில் தனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம்தான் தெரிந்துள்ளார் ஒரு சாதாரண மனிதன் வீடு கட்ட எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை. 

அதை உணர்ந்துதான் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் அன்று திருவாதிரை டெவலப் பர்ஸ் என புதிய பெயரில் ஒரு புதிய கட்டு மான தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன்பிறகு தொடங்கிய அனைத்து புராஜெக்ட்டும் திருவாதிரை பெயரிலேயே ஆரம்பித்துள்ளார், அதையடுத்து தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாக தனது திருவாதிரை டெவலப் பர்ஸ் நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார். அதன்பிறகு உருவானதுதான்.

கோவை வெள்ளலூரில் ஸ்ரீ திருவாதிரை கார்டன், திருவாதிரை நகர் பேஸ் 1, 2 திருவாதிரை அவன்யூ, திருவாதிரை அவன்யூ பேஸ் 1, 2, திருவாதிரை ரெஸிடென்சி, திருவாதிரை எஸ்.எஸ்.நகர், திருவாதிரை கோகநட் நகர், திருவாதிரை பேலஸ், அப்பநாளிணிக்கன் பட்டிபுதூரில் திருவாதிரை பார்க், கரடிவாவியில் ஸ்ரீ திருவாதிரை நகர் மற்றும் வெள்ளலூரில் திருவாதிரை பாரடைஸ் போன்ற 13 புராஜெக்ட்டை தொடங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதில் திருவாதிரை அவன்யூ பேஸ் 2 வில் 2011, 2012ம் ஆண்டு கோவை மாவட்ட காவல்துறையினருக்கு மட்டும் வெள்ளலூரில் மிக குறைந்த விலையில் 157 பிளாட்கள் அமைத்து கொடுத்துள்ளார் உதயகுமார பிள்ளை.

இதுவரை 75 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி 2000-க்கும் மேற் பட்ட வாடிக்கையாளர்களை வைத் துள்ளது இந்த திருவாதிரை டெவலப்பர்ஸ். இந்த நிறுவனத்தில் சுமார் 150க்கும் மேற்ப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் சம அளவு பங்கெடுத்துக் கொள்பவர்கள் ஊழியர்கள். 
அந்த வகையில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உழைக்கிறார்கள் ஊழியர்கள் என்றால் அது மிகையாகாது. இத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டு சிறப்பாக செயல்படும் திருவாதிரை டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குனருக்கு Eedhal Foundation வழங்கும் 2022ம் ஆண்டிற் கான சாதனையாளர் விருதான BUSINESS EXCELLENCE AWARD வழங்கி கௌரவித்துள்ளது.

கோவை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் சினிமா இயக்குனர்கள் ஆர்.வி.உதயக்குமார், பேரரசு மற்றும்  விஜய் டிவி புகழ் அம்மு அபிராமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விருது குறித்து உதயகுமார பிள்ளை கூறும்போது..

நாம் செய்யும் செயலை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் நான் மிக தெளிவாக இருப்பேன். எடுத்த காரியத்தை முடிக்காமல் இதுவரை விட்டதில்லை. என் பயணத்தில் எத்தனை இடஞ்சல்கள் வந்தாலும் அதை சமாளித்து என் இலக்கை அடைய முன்னேறி செல்வேன். 

எங்கள் நிறுவனம் மூலம் வீடு வாங்கிய வர்கள் பலர், தங்களுக்கு தெரிந்தவர்களையும் எங்களிடம் அறிமுகம் செய்து அவர்களும் பயன் அடைகிறார்கள். இதன்மூலம் எங்களது வாடிக்கயாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கிறது.சிலர் கஷ்டப்பட்டு பணத்தை சேமித்து வீடு வாங்குகிறார்கள். 

சிலர் வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கி வருகின்றனர். சொந்த வீடு வாங்குவதற்கு தற்போது சரியான காலம் என்று கூறப்படுவதால், சொந்த வீடு கனவில் இருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளோம். இது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் முடிவடையாமல் மேலும் பறந்து விரிந்திட தேவையான முயற் சிகளையும் எடுத்து வருகிறோம்  என்கிறார் திருவாதிரா டெவலப்பர்ஸ் உரிமையாளர் உதயகுமார பிள்ளை.

மக்கள் மனதில் திருவாதிரா டெவலப்பர்ஸ்... என்ன சொல்கிறார்கள்? 

* நம்பி வாங்கலாம். விலை குறைந்தாலும் தரத்தில் எந்தவித சமரசமும் கிடையாது.
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என் பார்கள். அதுபோல வீட்டை நீங்கள் உயர் திணையாக, உயிருள்ள ஜீவனாகப் பார்த்தால் வீட்டின் அழகு, அதன் முகம்போல் இருக்கும் வரவேற்பறையின் மூலம் தெரியும். அப்படிப்பட்ட வரவேற்பறையை திருவாதிரா டெவலப்பர்ஸ் சிறப்பாக அமைத்துக் கொடுக்கிறது.

* நாம் என்ன நினைக்கிறோமோ அதை சொன்னால் போதும், அதன்படியே வீட்டை கட்டிக் கொடுக்கிறார்கள். அதாவது வீட்டின் உள் வேலைபாடுகள், கதவுகள், ஜன்னல்கள், குழாய்கள், செல்ப், காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சிறப்பான வேலைபாடுகளுடன் முடித்துக் கொடுக்கிறார்கள். 

* அவர்கள் குறிப்பிடும் காலக்கட்டத்திற் குள்ளேயே வீட்டை கட்டி முடித்து சாவியை ஒப்படைத்துவிடுகிறார்கள்.
* மொத்த பணத்தையும் கொடுத்து வாங்கினா லும் சரி, வங்கி கடனில் வீடு வாங்கினாலும் சரி ஒரே மாதிரியான வரைமுறைகள்தான்.
* வங்கிக் கடன் வேண்டும் என்று சொன்னால் போதும் 2 தினங்களில் அது தொடர்பான பணிகளை முடித்துக் கொடுக்கிறார்கள்.

* கட்டிய வீடானாலும் சரி, நாமே பார்த்து கட்ட சொன்னாலும் சரி நம் எண்ணங்களை பிரதிபலிப் பதாகவே உள்ளது அவர்கள் கட்டும் வீடுகள்.
* வீடு கட்டிக் வாடிக்கையாளரிடம் ஒப்படைத் தாலும் அவ்வப்போது தொடர்பிலேயே இருக் கிறார்கள். வீட்டிற்குள் மேலும் ஏதேனும் சின்ன சின்ன வேலைகள் கூடுதலாக தேவைப்பட்டால் உடனடியாக அதை செய்து  கொடுக்கிறார்கள். 
* மொத்தத்தில் திருவாதிரா டெவலப்பர்ஸ் மக்கள் மனதின் பிரதிபலிப்பாகவே உள்ளது...

தலைப்புச்செய்திகள்