Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடையை  மாற்றக்கோரி  பொதுமக்கள் சாலை மறியல்

ஆகஸ்டு 01, 2022 05:47

 திருப்பூர் வீரபாண்டி திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை குடியிருப்பு பகுதியில் உள்ளதாலும், கே.வி.ஆர்., நகர் பகுதி மெயின் ரோட்டில் இருப்பதாலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. 

எனவே இந்த கடையை மூடவேண்டும், அல்லது வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடை மூடப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை 42-வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் கே. வி.ஆர்., நகர் ரோட்டில் அமர்ந்து கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். 

இதுகுறித்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கூறியதாவது:- கே.வி.ஆர்.நகர் பகுதியில் மெயின் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையினால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோவில்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சார்ந்த அமைப்புகள் உள்ளன. இப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். அப்புறப்படுத்த வேண்டும் எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் இல்லையென்றால் மக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்துவோம். 

இவ்வாறு இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக போரட்ட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
~

தலைப்புச்செய்திகள்